• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தென்காசி அருகே கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது

Byஜெபராஜ்

Jan 5, 2023

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த 10 பேரை போலீசார் விரட்டிப் பிடித்ததில் 6 பேர் பிடிபட்டனர் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். புளியங்குடியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து புளியங்குடி டிஎஸ்பி அசோக் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் பயிற்சி எஸ்ஐ செல்வமாணிக்கம் போலீசார் முஹம்மது கனி, சக்தி முருகேசன், பால்ராஜ், தர்மராஜ் சிறப்பு காவலர் மருது பாண்டியன் ஆகியோர் தனிபடை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் விற்பனைக்காக கஞ்சாவை பாக்கெட் போட்டுக் கொண்டிருந்தவர்களை பிடிக்கச் சென்றபோது தப்பி ஓடினர்.


அப்போது போலீசார் வளைத்து பிடித்ததில் புளியங்குடி கற்பக விதியைச் சேர்ந்த. பூலித்துரை மகன் காசித்துரை(22) முத்துப்பாண்டி மகன் மருதுபாண்டி(24) மாரியப்பன் மகன் கிருபாகரன்(28) தங்கராஜ் மகன் விக்னேஷ்(20) ரவி மகன் ராஜன் (20) குத்தாலிங்க மகன் திருப்பதி(48) என ஆறு பேர் பிடிபட்டனர் மற்றும் நாலு பேர் தப்பி ஓடிவிட்டனர் அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரொக்க பணம் ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாயும் 4 பைக் ஒரு ஆட்டோ இரண்டு கிலோ கஞ்சா இரண்டு அருவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புளியங்குடி பகுதியில் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர். தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி நாலு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.