• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு முதன் முதலாக நீர் வந்த நாள் இன்று!..

Byமதி

Oct 10, 2021

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து முதன் முதலாக தமிழகத்திற்கு நீர் வந்து இன்றுடன் 126 ஆண்டுகள் ஆகிறது.

இன்றைக்கு தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை, கடந்த 1895-ம் ஆண்டு, முதன் முதலாக அக்டோபர் 10ம் தேதியன்று திறக்கப்பட்டது. இந்த அணை கடந்த 1887ம் ஆண்டு ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிக்குவிக்கால் கட்டப்பட்டு, 1895ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1895ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு, அப்போதைய கவர்னராக இருந்த வென்லாக், தேக்கடிக்கு வந்து முதன்முதலாக தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார். அன்று முதல் தற்போது வரை 126 ஆண்டுகளாக தமிழகத்தின் ஐந்து மாவட்ட தாகத்தை தீர்த்து வருகிறது முல்லைப்பெரியாறு அணை.