• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அன்புமணி ராமதாசுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

ByA.Tamilselvan

Jan 2, 2023

அன்புமணி ராமதாஸ் சீண்டினால் தக்க பதிலடிகொடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக 4ஆக உடைந்திருக்கு. தமிழகத்தில் அடுத்த மிகப்பெரிய கட்சி நாங்க தான் என புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவால் தான் பாமகவிற்கு சட்டமன்றத்தில், பாராளுமன்றத்தில் இடம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் குடுத்ததே நாங்கதான்; நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த முடியாது. அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். * சிறுமையான கருத்தை சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையில் எதிர்காலத்தில் ஈடுபட வேண்டாம். * சீண்டினால் தக்க பதிலடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.