• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

போதை பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு

குமரி மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் துண்டு பிரச்சாரம் விநியோகித்தல், மது போதையால் ஏற்படும் பாதிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டுதல், கிராமிய பாடல்கள், ஆடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மதுவிலக்குத்துறை போலீசார் மற்றும் கிராமிய கலைஞர் கலைமாமணி பழனியாபிள்ளை, கண்டன்விளை பாடகர் இராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்டனர்.