• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

ByA.Tamilselvan

Dec 28, 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விதமாக நாளை திருச்சி வருகை தருகிறார் அதனால் பாதுகாப்பு கருதி நாளை திருச்சி மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் திருச்சி மாவட்டத்திற்கு நாளை 29-ம் தேதி வருகைதர உள்ளார். நாளை காலை சுமார் 9.30 மணியளவில் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகின்றார். அங்கிருந்து கார் மூலம் அண்ணா விளையாட்டரங்கம் வருகை புரிந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியும், மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கியும், முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங் கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.மணப்பாறை மொண்டிப்பட்டியில் உள்ள காகித ஆலையில் ரூ.1,350 கோடி யில் புதிதாக கட்டிய 2ம் அலகு மற்றும் சிப்காட் தொழிற்பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனை அடுத்து திருச்சி மாவட்டத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.