• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு பரிசு

Byதரணி

Dec 28, 2022

அகில இந்திய அளவிலான இறகுபந்து போட்டியில் வெற்றி பெற்ற, திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு பரிசு வழங்கினார்.
கடந்த 2019 ஆண்டிற்குரிய அனைத்து இந்திய காவலர்களுக்கு இடையேயான இறகுபந்து போட்டி மத்திய பிரதேஷ் மாநிலம்போபாலில் 2020 பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு போலீஸ் அணியில் விளையாடிய மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பெண்கள் பிரிவில் தனி நபர் பிரிவில் தங்கம் வென்றார். அவருக்கு தமிழ்நாடு அரசு (Rs. 5,00,000/- )ஐந்து லட்சம் ரொக்க பரிசு வழங்கியது அதை நேற்று காவல் துறை இயக்குனர் சைலந்திரபாபு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.