• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மஞ்சூர் பஜார் பகுதியில் எம்.ஜி.ஆர் நினைவு நாள்அனுசரிப்பு

மஞ்சூர் பஜார் பகுதியில் எம்.ஜி.ஆர் நினைவு நாள்அனுசரிப்பு

எஸ் ஜாகிர் உசேன்
அதிமுக நிறுவனர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அ தி மு க கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக எம்.ஜிஆர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது .

எம் ஜி ஆரின் 35வது நினைவு நாளை முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில், கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ் முன்னிலையில் அதிமுக தொண்டர்கள் இணைந்து எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் பேரூராட்சி அவைத் தலைவர்துரைசாமி ,மாவட்ட பிரதிநிதி சுருதி சுரேஷ் ,பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ்
கீழ்குந்தா பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி உடன் ரங்கன் , மஞ்சூர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகளும்… தொண்டர்களும்… பொதுமக்களும் கலந்துகொண்டனர்