சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’.
இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா நடிக்கிறார்.மேலும் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்களும் அண்ணாத்த படத்தில் உள்ளனர். இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்தை இந்த ஆண்டு பொங்கலுக்கே வெளியிட திட்டமிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த இயலவில்லை. அதனை தொடர்ந்து அண்மையில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. ரஜினியின் அறிமுகப்பாடலான இதனை மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடி உள்ளார். இந்தப்பாடல் வெளியான போது எஸ்பிபி குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. யுகபாராதி எழுதியுள்ள ‘சாரக்காற்றே’ என துவங்கும் இந்தப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர். ரஜினி – நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இது படத்தில் இடம்பெற்றுள்ளது.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)