• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் குவாரி நடத்த அனுமதிக்க கூடாது: தினகரன்

தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்கு அருகில் குவாரி நடத்த அனுமதி அளித்த அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தி.மு.க அரசு தமிழ்நாட்டு குடிமக்களுக்கான அரசா? அல்லது கனிம வளத்தைச் சுரண்டும் ஒரு சில குவாரி உரிமையாளர்களுக்கான அரசா? ஏற்கனவே காப்புக்காடுகளின் எல்லையிலிருந்தே குவாரி நடத்தலாம் என உத்தரவிட்ட அடுத்த சில நாட்களிலேயே தொல்லியல் நினைவுச் சின்னங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் குவாரி நடத்தக்கூடாது என்ற விதிமுறையை தற்போது தளர்த்தியிருக்கிறார்கள். கடும் கண்டனத்திற்குரிய இந்த அரசாணையை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.