• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மதுரையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு திடீர் ஆய்வு

Byp Kumar

Dec 20, 2022

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று ஆய்வு செய்தது.
குழு தலைவர் எஸ்.ஆர்.இராஜா தலைமையிலான இக்குழுவினர் முதலில் மதுரை சொக்கிக்குளத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர்.
தொடர்ந்து இக்குழுவினர் இலந்தைகுளம் (ELCOT)சிறப்பு பொருளாதார மண்டலம் அதனை தொடர்ந்து இலந்தைகுளம் துணைமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அய்வு செய்தனர்.


மேலும் மதுரை அவனியாபுரத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மதுரை எல்லீஸ் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பேருந்து பணிமனை, ஆகியவற்றையும் இக்குழ ஆய்வு செய்தது.
ஆய்வில் குழு உறுப்பினர்கள் மதிப்பீட்டுக் குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா, பொதுக் கணக்கக் குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அரவிந்த் ரமேஷ், ஆ.அருண்மொழிதேவன், இசக்கி சுப்பையா, காதர்பாட்சா முத்துராமலிங்கம், ஆ.கிருஷ்ணசாமி. ஏ.கே.செல்வராஜ். ஆர்.டி.சேகர். ஆ.தமிழரசி, கோ.தளபதி, வி.பி.நாகைமாலி, நிவேதா எம்.முருகன், எஸ்.எஸ்.பாலாஜி, சி.மகேந்திரன், ரூபி.ஆர்.மனோகரன். எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.