• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பாராளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க ஆலோசனை

ByA.Tamilselvan

Dec 20, 2022

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிக்க மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆகியோர் ஆலோசனை.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 29ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே கூட்டத் தொடரை முடிக்க பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குளிர்கால கூட்டத் தொடரை முன் கூட்டியே முடிக்க மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆகியோர் ஆலோசனை நடத்துகின்றனர். பாராளுமன்ற கூட்டத் தொடரை 23ம் தேதியுடன் முடிக்க ஆலோசனை நடந்து வருகிறது.