• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தாட்கோவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கடனுதவி வழங்க வேண்டி மனு

தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கடனுதவி வழங்க வேண்டி மாவட்ட கலெக்டரிடம் மனு
அந்த மனுவில் கூறியிருப்பதாவது..தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிய தீண்டாமையிலிருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மீளவும் வாழ்க்கையை சுதந்திர மனிதனாக சமத்துவ சமுதாயம் படைக்கும் நோக்கத்துடன் வாழ்வாதாரத்துக்கு தாட்கோ என்னும் கடனுதவி நிறுவனத்தை ஏற்படுத்தி கடந்த 40 ஆண்டு காலமாக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல சிறிய குடும்பங்கள் முன்னேறியும் வந்துள்ளது. ஆனால் தற்போது இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. பயனாளிகளின் மனுவை சரிபார்த்து தாட்கோ நிறுவனம் கடன்கள் தரமுன் வந்தாலும் சம்பந்தப்பட்ட வங்கிகள் ஏற்கனவே கடன் பெற்று திரும்ப கட்டத் தவறியவர்களை காரணம் காட்டி தற்போது வரும் பயனாளிகளுக்கு கடன் தர மறுக்கிறார்கள். இது சமூக நீதிக்கு எதிரான செயலாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியாகும் முன்னோடி வங்கிகளின் மேலாளர்கள் சாதி வேறுபாடு பார்ப்பது மூலமாகவும், இது நடைபெறுகிறது. எனவே சமூக நீதிக்கு பெயர் பெற்ற திமுக அரசு அமைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் தாட்கோ மூலம் கிடைக்கும் முன்னேற்றத்தை தடுக்கும் சக்திகளை கண்டறிந்து அவற்றைக் கலைத்து அனைத்து பயனாளிகளுக்கும் தாட்கோ கடன் கிடைக்க ஆவணம் செய்யும்படி அந்த மனுவில் கூறியிருந்தனர்.