• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருவண்ணாமலையில் கனமழையால்
முழு கொள்ளளவை எட்டிய 30 ஏரிகள்

தமிழகத்தில் கனமழையால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரிகள், நீர்நிலைகள் ஆகியவை நிரம்பியுள்ளன. இந்த மழையால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் காட்டுக்காநல்லூர், கண்ணமங்கலம், ஆரணி திருமலை சமுத்திரம் ஏரி உள்ளிட்ட 30 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இதனால் விவசாயத்திற்கு போதுமான அளவு ஏரி நீர்வரத்து கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.