கர்நாடகாவின் கலபுரகி நகரில் சோதனை சாவடி ஒன்றில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, வாகனம் ஒன்று சந்தேகத்திற்குரிய வகையில் வந்துள்ளது. போலீசார் அதை தடுத்து நிறுத்தியும், அந்த வாகனம் நிற்காமல் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளது. இதனால், போலீசார் விரட்டி சென்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர், வாகனத்தை சோதனையிட்டதில், காரில் இருந்த ஒரு பெட்டி 170 பொட்டலங்களில் 340 கிலோ எடை கொண்ட போதை பொருளை போலீசார் கைப்பற்றினர்.
வாகனத்தில் இருந்த அக்ரம், சுமீயர் மற்றும் மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)