• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் – கலெக்டர் அதிரடி அறிவிப்பு!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் கூறினார்.

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வருகிற 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் 120 மையங்களிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் 450 மையங்களிலும் மொத்தம் 570 மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தோவாளை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் 34 முகாம்களும் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 43 முகாம் களும் ராஜாக்கமங்கலம் 43 குருந்தன்கோடு 61 தக்கலை 61 திருவட்டார் 44 முன் சிறை 57 கிள்ளியூர் 54 மேல்புறம் 53 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 9 ஊராட்சி ஒன்றிய பகுதி மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வரும் ஞாயிறன்று தடுப்பூசி போடும் நபர்களில் அதிர்ஷ்டசாலியாக 20 நபர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு நபர்களுக்கும் மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு கிராம் தங்க நாணயம் 22 நபர்களுக்கும் பொன் ஜெஸ்லி கல்வி குழும தலைவர் ராபர்ட் சிங் நன்கொடை மூலமாக 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்படும்’ என கலெக்டர் கூறினார்.