• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உதகையில் தொடர் சாரல் மழை -இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்துவருகிறது.
மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்நிலையில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடும் மேகமூட்டத்துடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.தொடர் மழையின் காரணமாக காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.மேலும் தொடர் மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.