• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு வழக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்

ByA.Tamilselvan

Dec 9, 2022

ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி (24/11/2022) விசாரணை தொடங்கியது. மொத்தம் 7 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக தமிழக அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திற்க்கு எதிராக பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.இதனையடுத்து ஜல்லிக்கட்டு கலாச்சார உரிமையா? என்பதை முடிவு செய்ய 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை மேற்கொண்டது.இந்த விசாரணை இன்று நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது