• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

ByA.Tamilselvan

Dec 8, 2022

தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மறைந்த இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவ நாராயணமூர்த்தி, ‘பூந்தோட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார். நடிகர் வடிவேலுடன் இணைந்து நடித்த காட்சிகள் மிகவும் பிரபலமாகின.
தன்னுடைய உடல் அமைப்பு மற்றும் முக பாவணைகளால் தமிழ் திரைப்படங்களில் போலீஸ், கிராமத்து பண்ணையார் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் சிவ நாராயணமூர்த்தி. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் சுமார் 200 படங்கள் நடித்துள்ள சிவ நாராயணமூர்த்தி, படப்பிடிப்பு இல்லாத நாட்களில், புதுக்கோட்டை அருகேயுள்ள அணைக்கட்டு கிராமத்திற்கு சென்று குடும்பத்துடன் வசிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று (டிச.7-ம் தேதி) சொந்த ஊர் சென்றவர், இரவு 8.30 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.