• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நியாய விலை கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி

பதவி உயர்வு, பணி மாறுதல்களை நிறைவேற்றிவிட்டு, புதிய நியாய விலை கடை விற்பனையாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன்  ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில்   செய்தியாளிடம் அளித்த பேட்டியில்.
தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகளை காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் தற்போது பணியாற்றி வரும் சுமார் 20,000 விற்பனையாளர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். குறிப்பாக 20 கிலோ மீட்டருக்கு மேல் சொந்த ஊரிலிருந்து கடைக்கு அன்றாடம் வந்து போகக்கூடிய சூழ்நிலைகள் இருந்து வருகின்றன. 90 கிலோமீட்டர் கூட ஒரு நாளைக்கு பயனம் செய்ய வேண்டிய அவசியத்தில் அவர்கள் இருந்து வருகிறார்கள். அது போன்ற விற்பனையாளர்களுடைய இடம் மாறுதல் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக பெண் பணியாளர்கள் கூட பல்வேறு தோழியர்கள் இம்மாதிரி கோரிக்கைகளுக்காக காத்துக் கிடக்கிறார்கள். அதுமட்டுமல்ல பதவி உயர்வுகளும் விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காலியாக உள்ள சிற்றெழுத்தர், எழுத்தர் பணியிடங்களில் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வுகளையும் அளிக்க வேண்டும். இடமாறுதல்கள், பதவி உயர்வுகள் ஆகியவற்றை அளித்துவிட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு புதிதாக தேர்வு செய்யக்கூடிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இந்த கோரிக்கையை ஏற்கனவே செயலாளர் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு புதிய பணியிடங்களை நிரப்புவதற்கு  தமிழக அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார்.