• Tue. Apr 30th, 2024

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அனைத்து வகை பணியாளர்களுக்கு பணி ஆணை மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனுமனு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியியல் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 21 வகையான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறப்பு பயிற்றுநர்கள், இயன் முறை மருத்துவர்கள், பள்ளி ஆயத்த மைய ஆசிரியர்கள் என சுமார் 2800 பேர் 18 வருடங்களாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 47 சிறப்பு பயிற்றநர்கள்,13 இயன்முறை மருத்துவர்கள், 28 பள்ளி ஆயத்த மைய ஆசிரியர்கள் , “3552 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பணியாற்றி வருகின்றவர்கள் இன்று மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர்.
அவர்கள் அளித்த மனுவில்… “தாங்கள் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் துறையில் பணியாற்றி வருவதாகவும் தங்களுக்கு முறையான பணி அரசணையோ ஊதிய உயர்வோ இதுவரை வழங்கப்படவில்லை” என்றும் “மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் தாங்கள் செய்து தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்து வாழ்ந்து வந்த போதிலும் தங்களது எந்த விதமான தொகுப்பூதியமும் வழங்கப்படவில்லை” என்றும் “எந்த விதமான அடிப்படையில் அரசின் சார்பில் பணியாற்றி வருகிறோம் என்று எங்களுக்கு புரியவில்லை” என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *