• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

குன்னூர் கிரோஸ் ஹில் பகுதியில் காட்டெருமைகள் கூட்டம்

குன்னூர் கிரோஸ் ஹில் பகுதியில் காட்டெருமைகள் வருகை அதிகரித்துவருவதால் மனித, வனவிலங்குகள் மோதல் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை…
மலை மாவட்டமான நீலகிரி சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து ஊருக்குள் விலங்குகள் வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் குன்னூர் கிரோஸ் ஹில் பகுதிக்கு செல்லும் சாலையில் 4க்கும் மேற்ப்பட்ட காட்டெருமைகள் நிற்பதால் அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
எனவே மனித, வனவிலங்குகள் மோதல் ஏற்படுவதற்கு முன் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.