• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையில் சென்ற பைக்குகள் மீது மோதிய விபத்தில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் பலியானார்.
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டவரை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுகொண்டிருந்த 2 பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதியது. பின்னர் ஆம்புலன்ஸ் அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் 2 பைக்கில் சென்ற 4 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பைக்கில் தனது சகோதரனுடன் பயணம் செய்த ஆயூஷ் வர்மா என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் பயணித்த கணவன் – மனைவியும் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.