• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நம்பியூரில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய கூட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
பனைமரத் தொழிலாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார்,கண்ணன், தங்கமுத்து, முனீஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் எர்ணவூர் நாராயணன் பேசியபோது இங்கு 200 பனைமர தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 89 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பனைமரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும் பொருளாதாரத்தில் முன்னிலைப்படுத்தும் வகையிலும் மாநிலம் முழுவதும் தொடர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் இருக்கக்கூடிய பனைமர தொழிலாளர்கள் தங்களது பெயர்களை வாரியத்தில் பதிவு செய்து வாரியம் மூலம் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தமிழகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகளவு பனைமரத் தொழிலாளர்கள் உள்ள மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கு சிறப்பு கூட்டங்கள் நடத்தி வருகிறோம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 49 லட்சம் மதிப்பில் பனைமர தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நம்பியூர் பகுதியில் உள்ள பனைமர தொழிலாளர்களுக்கு சுமார் 200 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பனை நல வாரியத்தில் சுமார் ஒரு லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பது என உறுதி கொண்டுள்ளோம் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கென சிறப்பு கவனம் செலுத்தி பனைமர தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த பல்வேறு நலத்திட்டங்களை செய்ய உள்ளார் எனவும் கூறினார்.
கூட்டத்தில் வழக்கறிஞர் விநாயகமூர்த்தி, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், ஆர்.கே.நகர் ராஜேஷ், பனைமர நல வாரிய நிர்வாகிகள் நாடார் சங்க நிர்வாகிகள் சமத்துவ மக்கள் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட செயலாளர் சங்கரகுமார் செய்து இருந்தார்.