• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை அல்லது திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு- இபிஎஸ் அதிரடி முடிவு

ByA.Tamilselvan

Nov 25, 2022

கோவை அல்லது திருச்சியில் அ.தி.மு.க. மாநாடு- இபிஎஸ் அதிரடி முடிவு
A.TAMILSELVAN
பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி திருச்சி,அல்லது கோவையில் பிரமாண்டமாநாடு நடத்த இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொன்விழா நிறைவு கொண்டாட்டத்தையொட்டி மாநாடு ஒன்றை பிரமாண்டமாக நடத்த இபிஎஸ் திட்டமிட்டு உள்ளார். ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி இந்த மாநாட்டை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அல்லது கோவையில் மாநாடு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து தனது ஆதரவாளர்களை திரட்டி, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு முன்னோட்டமாக சிறப்பான முறையில் மாநாட்டை நடத்தவும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் வியூகம் வகுத்துள்ளனர்.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறார். இதுதொடர்பாக மாநாட்டில் மேலும் பல அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது