• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

*காவல்துறையினரை கண்டித்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஆர்ப்பாட்டம்*

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையின் மதுரை மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாண்டி ஜோதி கூறியதாவது, தமிழக முதல்வரின் ஆணையின் பேரில் தமிழக காவல்துறையினர் சைலேந்திர பாபு அவர்களின் தலைமையிலான தமிழக காவல்துறையினர் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையில் பொறுப்பாளர்களால் தமிழகத்தில் எந்த பகுதியிலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. இருப்பினும் மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் நடவடிக்கையின் பேரில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனத் தலைவர் ராமர் பாண்டி மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் விட்டின் கதவை உடைத்து காவல்துறையினர் சேதப்படுத்தி விட்டதாகவும், காவல்துறையே ஆயுதங்களை எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்து விட்டு பொய்யான வழக்கு போடுவதாகவும் கூறினர்.

காவல்துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்யக் கூடாது, பதிவு செய்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.