• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி

ByA.Tamilselvan

Nov 17, 2022

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டநிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
வருடாந்திர மண்டல – மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால், பக்தா்களின் வருகை 40 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, கேரள அரசு சார்பிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் செல்லவும், தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர் சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை. பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.