• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நடிப்பில் இருந்து ஓய்வு – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு!!

ByA.Tamilselvan

Nov 17, 2022

நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர் கான் பாலிவுட்டில் தரமான படைப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ மாஸ் ஹிட் படம். அதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும் அண்மையில் திரையரங்கில் பான் இந்தியா படமாக வெளியான ‘லால் சிங் சத்தா’ எதிர்பார்த்த அளவில் கைக்கொடுக்கவில்லை.
அந்த சமயத்தில் ரசிகர்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் படம் பெரிதாக பேசப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் அடுத்து நடிக்க வேண்டிய ‘சாம்பியன்ஸ்’ படத்திலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் தற்போது நடிப்பில் இருந்தே சிறிது காலம் ஓய்வு பெறவுள்ளதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் அதில் நடிக்க வேறு ஒரு நடிகரை தேர்வு செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.


தனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக குடும்பத்துடன் நேரம் செலவழிக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். எனவே நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்று அவர்களுடன் நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.