புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவூர் மதயானிபட்டி மன்டையூர் ஆகிய ஊர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இன்று உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை நடைபெற்றது.

மிக பிரமாண்டமாக பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமில் 800 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 46 -வகையான கோரிக்கை மனுக்களை 15-துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் முகாமிட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
அப்போது தொழிலாளர் வாரிய அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்பட 110-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் வகையில் நகல்களை வழங்கினர். எனவே முகாமில் நகல்களைப் பெற்ற பயனாளிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் V.தெய்வநாயகி விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் RR. ரவிச்சந்திரன் எம்.வள்ளியம்மை ஆகியோர் தீவிர கண்கானிப்பில் இம் முகாம் நடைபெற்றது.

அப்போது இம்முகாமில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காலை 9 மணி முதல் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க வருகை தந்தனர் அப்போது பொதுமக்களை சந்தித்த திமுக வடக்கு மாவட்ட செயளாளர் KK.செல்லபாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன் திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முபிம.சத்யசீலன் முன்னாள் சேர்மன் முபி.மணி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா இளைஞரணி துணை அமைப்பாளர் A.தேவராஜ் P.பாண்டியன் எட்வின்ஜோ திமுக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முத்தழகன் உள்பட திமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து பரிந்துரை செய்தனர்.
அப்போது உடனடி தீர்வாக 110- பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்டு நகல்களை வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.