விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட (கூலிப்) புகையிலைப் பொருட்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை பறிமுதல் செய்து இரு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அம்பலப்புளிபஜார் நான்கு முக்கு பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், சார்பு ஆய்வாளர் கௌதம் விஜய் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கூலிப் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் மனோவிஜய் (24) மற்றும் சுப்புலட்சுமி மகன் சுந்தர் (24) என தெரியவந்தது. போலீஸார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 8 கிலோ கூலிப் புகையிலைப் பொருட்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
