

சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளியில் ஏழாவது ஆசிய சாம்பியன் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி கோப்பை அறிமுக விழா நடைபெற்றது,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஏழாவது ஆடவர் ஹாக்கி போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவதும் வலம் வர உள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த இருபதாம் தேதி சென்னை மெரினாவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுக விழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன் தொடர் நிகழ்வாக சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளி மைதானத்தில் ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் வெற்றி கொப்பையை அறிமுகம் செய்யும் விழா நடந்தது. இவ்விழாவில் கல்வி குழுமம் தலைவர் டாக்டர் செந்தில்குமார் தலைமை ஏற்று ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் வெற்றிக் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இதில் தமிழ்நாடு ஆக்கி யூனிட் பொதுச் செயலாளர் செந்தில்ராஜ்குமார், முதல்வர் ஜூடி, உதவி தலைமை ஆசிரியர்கள் அபிராமி, டயானா, பள்ளி மாணவர் தலைவர் அர்ஜுன், பள்ளி மாணவர், துணை தலைவர் போர்க்கலை ரிஷிக, பள்ளி விளையாட்டுத்துறை அமைச்சர் கௌஷிக், பள்ளி விளையாட்டுத்துறை துணை அமைச்சர் சனோஜ், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக கோப்பையை மாணவர்கள் கொடி பிடித்து ட்ரம்ஸ் செட் அடித்து ஊர்வலமாக மைதானத்திற்கு அழைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து கோப்பை தேனி மாவட்டத்திற்கு தொடர்ந்து பயணித்தது.
