தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வி தகுதி, அனுபவம் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.