வாசுதேவநல்லூரில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்து கொண்டார்.
வாசுதேவநல்லூர் சுப்பிரமணியன் நாடார் வடிவம்மாள் கல்வி அறக்கட்டளையின் எஸ். தங்கப்பழம், கல்வி குழுமத்தினால் இயங்கி வரும் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக புவியியல் பேராசிரியர். முது முனைவர் அழகுராஜாபழனிசாமி கலந்துகொண்டார்.
தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி தேசிய மாணவர் படையின் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார் .இதில் வேளாண்மை கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்