• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்காக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

Byகாயத்ரி

Aug 29, 2022

இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா.

இன்று வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா செப்.8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வரக்கூடும் என கூறப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், இன்று முதல் செப்டம்பர் 11-ஆம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.