நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. நீட் முதுநிலை கலந்தாய்வுக்கு தடையில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூரட் அறிவித்துள்ளார். நீட் முதுநிலை கலந்தாய்வு திட்டமிட்டபடி நடக்கட்டும், அதை நிறுத்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, நீ முதுநிலை கலந்தாய்வு திட்டமிட்டபடி செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் முதுநிலை கலந்தாய்வு தொடர்பான வழக்கை பட்டியலிடக்கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.