• Wed. Mar 19th, 2025

74 ரன் வித்தியாசத்தில் நெல்லை ராயலை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ்…..

Byadmin

Jul 22, 2021

சென்னை சிதம்பரம் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டிகள் புதனன்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில் நெல்லை சூப்பர் கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இளம் பேட்ஸ்மேன் அமித் சாத்வீக், மற்றும் இடது கை பந்து வீச்சாளர் மதிவாணனின் பந்து வீச்சால் நிலை குலைந்தது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.
நெல்லை அணியின் துணை கேப்டன் பாபா இந்திரஜித்தின் மோசமான தொடக்க ஆட்டம் அணியை தோல்விக்கு இட்டுச்சென்றது. 20 ஓவர்களில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. கேப்பிட்டல் பிளேயர் ஆப்தி மேட்ச் விருதை அமித் சாத்வீக் தட்டிச்சென்றார்.
இன்றயை போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும், மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.