சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மாற்றப்பட்ட நிலையில் புதிதாக வந்த ஊராட்சி செயலாளர் லாகின் ஏற்கனவே வேலை பார்த்த ஊராட்சி பெயரில் இருந்ததால் ஊராட்சியின் செயல்பாடுகளை பதிவேற்றம் செய்ய முடியாமல் ஊராட்சி செயலாளர் திணறினார்.

மேலும் குறைந்த அளவு அதிகாரிகளே வந்ததால் பொதுமக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.
குடிநீர் தெரு விளக்கு சாலை வசதி மின்தடை உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறிய நிலையில் சில நேரங்களில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு வாக்குவாதங்களும் ஏற்பட்டது.
இது போன்ற பல்வேறு காரணங்களால் ஊராட்சியில் முக்கிய தீரமானங்கள் நிறைவேற்றப்படாமல் முடிந்ததாக கூறப்படுகிறது. இனிவரும் காலங்களில் கிராம சபை கூட்டம் நடப்பதற்கு முன்பு தேவையான அளவு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் மற்றும் அனைத்து துறை சேர்ந்த அதிகாரிகளும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கருப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





