சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை சப் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்குரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது சாத்தூரில் இருந்து தாயில்பட்டி வழியாக ஆலங்குளம் சென்று கொண்டிருந்த காரை சோதனையிட்டனர்.

காரில் பின்புறம் ஏழு முடைகள் இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் சந்தேகத்தின் பேரில் மூடைகளை பிரித்து சோதனை நடத்தினர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை,குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில் காரை ஓட்டி வந்த சாத்தூர் நென்மேனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரவண மணிகண்டன் (36 )சாத்தூர் சாலமன் நகர் குருலிங்கபுரத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (52) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து காரில் இருந்த 250 பாக்கெட் புகையிலை , 250 குட்கா பாக்கெட் உட்பட ஏழு மூடைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்
புகையிலை பாக்கெட்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ஆகும்.