கோவையில், நவம்பர் 29 2024. 63-வது தேசிய மருந்தக வார விழாவை முன்னிட்டு, விளாங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் புகழவேந்தன், பிபிஜி குழும கல்வி நிறுவனங்களின் செயல் இயக்குநர் கேப்டன் டாக்டர் அமுதா குமார், பிபிஜி பார்மசி கல்லூரி முதல்வர் டபிள்யூ.டி.சாம் சாலமன் ஆகியோர் கலந்து கொண்டு மருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.