• Mon. Apr 21st, 2025

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்

BySeenu

Mar 25, 2025

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் சிறப்புப் படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சோதனையில் சிக்கியது.

தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி உலர் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜபத் திகல் (வயது 25), கண்டி திகல் (வயது 46), சுலதா நாயக் (வயது 37), ரூபினா நாயக் (வயது 44), ஜோத்ஸ்ராணி திகல் (வயது 44) மற்றும் கெலெய் நாயக் (வயது 32) என்பது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட உலர் கஞ்சாவின் மதிப்பு சுமார் 31 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.