

தியாகராசர் பொறியியற் கல்லூரி நிறுவனர் நாள், நிகழ்ச்சியில் 215மாணவர்களுக்கு 61 லட்சத்தி 92 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தியாகராசர் பொறியியற் கல்லூரியில் நிறுவனர் நாள் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறங்காவலர் தியாகராஜன் தலைமையிலும் கல்லூரி முதல்வர் முனைவர் பழனிநாதராஜா முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை பிரிகல் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்மோகன் தொழில் முனைவோர் அயர்லாந்து நாட்டின் சிறப்பு தூதுவருமான ராஜிமெச்சேரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அண்மையில் மறைந்த தலைவர் மற்றும் தாளாளர் உயர்திரு கருமுத்து கண்ணன்அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் முனைவர் திரு. மு. பழனிநாதராஜா அவர்கள் கூறியது வாழ்ககையை முன்னோக்கி வாழ பின்னோக்கி
பார்க்க வேண்டும் என்று கூறினர். கல்லூரியின் அறங்காவலர் தியாகராஜன்
அவர்கள் தன் தலைமை உரையில் இன்றைய நிகழ்வில் 215 மாணவர்களுக்கு
கல்வி ஊக்கத் தொகையாக ரூ.61,92,000 (அறுபத்தி ஒரு லட்சத்தி தொண்ணூற்றி இரண்டாயிரம்) வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார். கல்லூரியின் முன்னாள் மாணவர் அஜயன் அவர்கள் ஆண்டுதோறும் ரூபாய் ஐம்பது இலட்சம் (ரூ. 50,00000) கல்வி ஊக்கத்தொகையாக இக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிவருவதைப் பாராட்டினார். 1998-ல் படித்து முடித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா ஆண்டை ஓட்டி சுமார் முப்பத்தி ஐந்து லட்சத்து ஆயிரத்தி தொலாயிரத்தி தொன்னூற்றி எட்டு (35,01,998) தொகையினை கல்லூரிக்கு வழங்கினார்கள். மேலும் 25 மாணவர்களுக்கு கல்வி கொடையோடு உணவுக் கொடையும் வழங்கிவருவதைக் கூறினார். தன் தந்தை கருமுத்து கண்ணன் அவர்கள் குறிப்பிடும் ஈதல் இசைபட வாழ்தல் என தொடங்கும் குறளை மேற்கோள்காட்டி தன் உரையை நிறைவுசெய்தார். கோவை பிரிகால் நிறுவனத்தின் நிறுவனர் சிறப்புவிருந்தினர் திரு.விஜய்மோகன் அவர்கள் சிறப்புரையில், மாணவர்களை இந்தியாவின் எதிர்காலம் என்றார். தான் ஐம்பது ஆண்டு கால பட்டறிவின் அடிப்படையில், வளம்சார் பொருளாதாரம், திறன்சார்.
பொருளாதாரம் புதுமைசார் பொருளாதாரம் எனப் பொருளாதாரத்தை
வகைப் படுத்தினார். வளம்சார் பொருளாதாரமாக மட்டுமின்றி, திறன்சார் பொருளாதாரமாகவும் இருந்திருத்தால் வளர்த்த நாடாகலாம் என்றார் .
தொழில் முனைவோறும் அயர்லாந்து நாட்டின் சிறப்பு தூதுவருமான ராஜிமெச்சேரி அவர்கள் தனது உரையில், தனக்கே உரிய பழம் பெருமைக் கொண்ட இக்கல்லூரியில் படிப்பதற்கு நல்வாய்ப்பு பெற்றநீங்கள் பெருமிதம் கொள்ளவேண்டும். தொழில்முனைவோர் தங்கள் பயனத்தை, செயல்படுத்ததக்க வெற்றியையும் பின்னடைவையும் சரிசமமாக ஏற்கும் பண்புவேண்டும். நிலைத்த பொருளாதாரத்திற்கு புதிய தொழில்கள் தொடங்குவது தீர்வாகும். சமூகத்திற்கு கொடுத்து உதவுங்கள், விழிப்புமிக்க குடிமகனாக இருங்கள், நோக்கத்தோடு செயல்படுங்கள் என்று கூறி தனது
உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியின் நிறைவாக நிர்வாகப் பதிவாளர்
முனைவர் சொக்கலிங்கம் நன்றியுரை கூறினார்.
