

புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தியார் அவர்கள் தலைமை தாங்கினார். புரட்சி பாரதம் கட்சியின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் முன்னிலை வகித்தார் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து புரட்சி பாரதம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் பல ஆண்டு காலமாக பட்டியல் இன மக்களுக்கு சுடுகாடு இல்லாமல் சுடுகாடு இருந்தால், பாதைகள் இல்லாமலும் அப்படி பாதையில் சென்றால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்று தடுப்பதும் அடித்து விரட்டுவதும் தொடர்கிறது. ஆகையால் பட்டியலின மக்களுக்கு ஊராட்சிகள் உள்ளடக்கி பகுதியில் மின்சார சுடுகாடு அமைத்து இறந்தவர்களின் உடலை அரசு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டும் என்றும் மேலும் நெய்வேலி உள்ள என்எல்சி மத்திய அரசு நிர்வாகம் ஏற்கனவே விவசாயிகளிடம் விவசாய நிலங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து நிலங்களை குறைந்த விலை கொடுத்து பிடுங்கி விட்டார்கள் விவசாயிகள் போராட்டத்தின் போது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு என்எல்சியில் வேலை வழங்கப்படும் என்று சொன்னார்கள். மேலும் கொடுத்த வேலை கூட தராமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்துள்ளார்கள். மீண்டும் விவசாய நடைபெறும் நிலங்கள் மீது வலுக்கட்டாயமாக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் எடுப்பது விவசாயத்தை அப்புறப்படுத்துவது இதற்காக போராட்டம் செய்வதின் மீது தடியடி நடத்துவது கண்டிக்கத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட தலைவர்கள் குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி அவர்களை கைது செய்த காவல்துறையை வன்மையாக புரட்சி பாரதம் கட்சி கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் மேலும் நிலங்களுக்குரிய இழப்பீடும் அவர்களுக்கு நிரந்தர பணியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
