• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

60 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதம் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026 கணக்கெடுப்பு படிவம் விநியோகம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் 01.01.2026ஐ தகுதி நாளாகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்க கூடிய வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் கடந்த 04.11.2025 அன்று முதல் ஒவ்வொரு வாக்காளர்களின் வீடுகளுக்கும் சென்று வழங்கி வருகிறோம். 

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக நமது மாவட்டத்தில் உள்ள 14 இலட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்களுக்கு படிவங்கள் அச்சடிக்கப்பட்டு, இதுவரை 8 இலட்சத்து 91 ஆயிரத்து 671 வாக்காளர்களுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் படிவங்கள் வழங்கும் பணி முழுமையாக நிறைவு பெறும். 

அவ்வாறு நிறைவடைந்த பின்னர், அடுத்த கட்டமாக வாக்காளர்களிடமிருந்து அவர்களின் விவரங்களை எல்லாம் பூர்த்தி செய்து, படிவங்களை திரும்ப பெறும் பணி தொடங்க இருக்கிறது. 13.11.2025 ஆம் தேதியன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறும் பணியில் தொடங்க இருக்கிறார்கள்.