செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஹபிபுன் நிஷா, தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். குடும்ப நண்பரான யாசர் அராபத், “பெண்கள் மாத சம்பளத்தில் மட்டும் முடங்கி விடக் கூடாது, தொழில் தொடங்க வேண்டும்” என கூறி நிஷாவை ஊக்குவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தொழில் தொடங்குவதற்கான பணம் தேவையெனச் சொல்லிய நிஷாவிடம், “உன் பெயரில் வங்கியில் ஒரு கோடி ரூபாய் லோன் எடுத்து தருகிறேன், கையெழுத்து மட்டும் போடு” என யாசர் கூறியுள்ளார். இதற்கு எனக்கு எப்படி ஒரு கோடி ரூபாய் வங்கி கடன் கிடைக்கும் எனக்கே ஏற்கனவே 15 லட்சம் ரூபாய் வங்கி கடன் உள்ளது என்னுடைய எலிஜிபிலிட்டி 15 லட்சம் தானே என கேட்டதற்கு அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ கையெழுத்தை மட்டும் போடு என கூறியுள்ளார். இதன் மூலம் நிஷா பெயரில் சுமார் 60 லட்சம் ரூபாய் கடன், 4 வங்கிகளில் இருந்து மோசடி முறையில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், அந்தப் பணத்தை யாசர் தனது கணக்குகளுக்கு மாற்றி, “நீ தனியாக தொழில் நடத்த முடியாது, நான் பாட்னராக ஹோட்டல் தொடங்குகிறேன்” எனக் கூறி பகுஸ் பிரபுஸ் அண்ட் ரெஸ்டாரன்ட் என்ற ஹோட்டல் தொடங்கியுள்ளார். ஆனால், அந்த ஹோட்டலில் இரவு நேரங்களில் பெண்களை அழைத்து வந்து மது, கஞ்சா போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையை எதிர்த்து நிஷா கணக்கு விவரங்களை கேட்டபோது, யாசர் அவரை அவதூறாக திட்டி, மிரட்டியதும், பின்னர் நிஷா மற்றும் அவரது சகோதரர்கள் யாசர் வீட்டிற்கு சென்றபோது, யாசர் மற்றும் அவரது மனைவி சேர்ந்து செருப்பாலும், தொடப்பத்தாலும் தாக்கிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நிஷா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்து முறையாக விசாரிக்க வில்லை என கூறி,யதோடு.
தனது பெயரில் 60 லட்சம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டதாலும், காவல் துறையின் அலட்சியத்தாலும் மன அழுத்தத்தில் ஆழ்ந்த நிஷா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் தொழில் தொடங்கலாம் எனக் கூறி பணம் மோசடி செய்ததோடு தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.