• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பாலியல் மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு..,

ByKalamegam Viswanathan

Oct 17, 2026

இன்று காலை அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு, விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. குறிப்பாக, Childline 1098 செயல்பாடுகள் குறித்தும், பாலியல் தீங்கிழைத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது, மற்றும் போதை குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் கொடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் 130 ஆண் குழந்தைகளும், 107 பெண் குழந்தைகளும், 15 – ற்க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றனர்

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் குழந்தைகள் உதவி மைய (1098) பணியாளர்கள் திருமிகு பா. மாரீஸ்வரி, மற்றும் புளியம்மாள் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர். தலைமை ஆசிரியர் திருமிகு செந்தில் குமார் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக வருவாய் ஆய்வாளர் திருமிகு செந்தில் குமார் அவர்களும், திரளி பிட் 1, 2, கிராம நிர்வாக அலுவலர் திருமிகு ரவிச்சந்திரன் அவர்களும், பஞ்சாயத்து கிளர்க் திருமிகு ராஜ்குமார் அவர்களும், மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் திருமிகு கோட்டை திருப்பதி அவர்களும், கிராம செவிலியர் திருமிகு ராமதிலகம் அவர்களும், அங்கன்வாடி ஆசிரியர் திருமிகு. பூங்கொடி அவர்களும், கலந்து கொண்டனர்.