• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மே 5ம் தேதி,மதுரையில் வணிகர் தின பாதுகாப்பு மாநாடு

Byகுமார்

Apr 9, 2024

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பில் வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டு திடலில் துவங்கிய தொடர்ஜோதி ஓட்டம் கோவை மண்டலம், நெல்லை மண்டலம் முடிவுபெற்று, மதுரை மண்டலம் இன்று ஆரம்பித்தது. ஓட்டத்தின் ஜோதியை மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மாநில இளைஞரணி செயலாளர் மணிகண்டன் ஆகியோரிடம் வழங்கினார். இந்த தொடர் ஜோதி ஓட்டம் மதுரையில் சிவாஜி சிலை முன்பு ஆரம்பித்து, எம்ஜிஆர் சிலை வரை சென்றது. அதன் பின்னர் கடை, கடையாக சென்று துண்டு அறிக்கை வழங்கினார்கள். வணிகர் தினம் மாநாடு குறித்து விளக்கிக் கூறியும் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கடை உரிமையாளர்களிடம் கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல தலைவர் மைக்கேல்ராஜ், சூசைஅந்தோணி, தங்கராஜ்,ஜெயக்குமார், குட்டி(எ)அந்தோணிராஜ், சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளம் கலந்து கொண்டனர். மாநாட்டின் நோக்கமானதுசமூக விரோதிகளிடம் இருந்து வணிகர்களை காத்திட வேண்டும். ஆன்லைன் வடியும் கார்ப்பரேட் வணிகத்தை கட்டுப்படுத்தி உதய சூனியத்தை காத்திட வேண்டும். அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தி வணிகர்களுக்கு வணிக செய்ய பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்கிட வேண்டும். இந்த ஜோதி தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சென்று நிறைவாக மே ஐந்தாம் தேதி வணிக தினம் மாநாட்டில் நிறைவடையும்.