• Thu. May 2nd, 2024

திமுக கார்ப்பரேட் கம்பெனி திமுகவை தான் ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்-கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரையில் பேட்டி

Byகுமார்

Apr 9, 2024

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார், மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு வாக்குகளை சேகரித்தார்.

அவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக தகவல்தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

இன்றைய தினம் இந்தப் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட், பழமார்க்கெட்க்கு நேரில் வந்து வியாபாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் நிலைமையை அறிய எப்படி விளைச்சல் உள்ளது, என்ன விலை என்பதை கேட்டு தெரிந்து அறிந்தேன்.

இன்றைக்கு வறட்சியாக இருக்கிற காரணத்தினால், விளைச்சல் சில இடங்களில் குறைவாக உள்ளது அதனால் விலை அதிகம் உள்ளது என்று கூறினார்கள்.

கேள்வி: ஆட்சி இருக்கும் பொழுது இழிவாக பேசுவதும், எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் பொழுது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள் என்று திமுக அறிக்கை வெளியிட்டுள்ளதே.

பதில்: எந்த அடிப்படையில் என்று நீங்கள் கூறுங்கள், வேறு வழியின்றி பேச வேண்டும் என்று இப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அது உண்மை இல்லை அதிமுகவை பொறுத்தவரை எப்போதும் ஒரே நிலைப்பாடு தான்.

இன்றைக்கு நாங்கள் பத்தாண்டு அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம், மத்திய அரசு அகவிலைப்படி உயர்த்தும்போது அந்த காலகட்டத்தில், பிடித்தம் இல்லாமல் அகவிலைபடியை  அரசு ஊழியர்க்கு கொடுத்தோம்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று வருடத்தில் இரண்டு முறை, ஆறு மாதம், ஆறு மாதம்  என அந்த அகவிலைப்படியை  பிடித்தும் செய்துதான் அரசு ஊழியருக்கு கொடுத்துள்ளார்கள். ஆகவே ,அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திராவிட முன்னேற்ற கழக அரசு நிறைவேற்றப்படவில்லை.

தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொடுக்கப்படும் என்று தேர்தல் அறிவிப்பில் கொடுத்தார்கள், தேர்தல் பரப்புரையிலும் வெளியிட்டார்கள். ஆனால் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக அரசு அறிவிக்கவில்லை, ஸ்டாலினும் அறிவிக்கவில்லை, இதுகுறித்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், நேற்றைய தினம் இதுகுறித்து நான் அறிக்கை வெளியிட்டேன். அதற்குத்தான் இந்த பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

கேள்வி: பிரச்சாரத்தில் முதல்வர் அரசு ஊழியர்களுக்கு கொடுப்பேன் என்று கூறுகிறார்

பதில்; சர்க்கரை என்றால் சொன்னால் இனிக்காது வாயில் போட்டால் தான் இனிக்கும். ஏன் மூன்று வருடம் நடைமுறைப்படுத்தவில்லை. ஆக தேர்தல் வரும் போது ஆசை வார்த்தைகள் கூறுவார்கள், வாக்குகளை பெறுவார்கள் தேர்தல் முடிந்த பின்பு விட்டுவிடுவார்கள், அதுதான் திமுகவின் வாடிக்கை.

கேள்வி: திராவிட கட்சிகளால் எந்த நன்மை இல்லை, எந்த பயனும் நாங்கள் அனுபவிக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்?

பதில்: அப்புறம் ஏன் எங்களுடன் கூட்டணி வைத்திருந்தார், பயனே இல்லையே அப்புறம் எதற்கு எங்களுடன் கூட்டணியை மாறி, மாறி வைத்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு. ஒரு நிலையில்லாத கொள்கையில் இல்லாத கட்சி பாமக கட்சி.

கேள்வி: அம்மா மீது எங்களுக்கு எப்போதும் மரியாதை உண்டு, இப்போது உண்டு என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளரே?

பதில்; பரவாயில்லை எங்கள் தலைவரின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட தலைவர்கள் எப்படி ஆட்சி செய்தார்கள் மக்களுக்கு எப்படி தொண்டு ஆற்றினார்கள், அதையெல்லாம் தெரிந்த காரணத்தினால் எதிர் அணியில் இருப்பவர்கள் கூட எங்கள் தலைவர்கள் புகழ்ந்து பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

கேள்வி: உங்கள் வாக்குகளை குறிவைத்து பேசவில்லையா?

பதில் :வாக்குகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி, அது பாரதிய ஜனதா கட்சி .நல்லது செய்தால் நல்ல பண்பு உள்ளவர்கள் பாராட்டுவார்கள்.மறைந்த தலைவர்களை பாராட்டுவது தான் மரபு 

கேள்வி; உங்களை பாராட்டவில்லையே?

பதில்: இன்றைக்கு நாங்கள் அவர்களை எதிர்க்கிறோம். அவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். எப்படி என்னை பாராட்டுவார்கள்

கேள்வி; முதல்வர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது எடப்பாடியார் அதிமுகவை குத்தகைக்கு எடுத்து உள்ளார் என்று கூறியுள்ளாரே?

பதில்: அவர் கட்சியை தான் குத்தகைக்கு எடுத்துள்ளார், இன்றைக்கு திமுக கார்ப்பரேட் கம்பெனிஅந்த பழக்க தோஷம் விடாது. நாங்கள் அப்படி இல்லை நான் எல்லா பொதுக் கூட்டத்தில் சொல்லி விட்டேன் நான் தொண்டன், தலைவர் கிடையாது.

 அவர்களை போல குடும்ப வாரிசு அரசியல் அண்ணா திமுகவில் இல்லை. நூறு சதவீதம் பாருங்கள் வரலாற்றை பாருங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,

புரட்சித்தலைவி அம்மா அதன் பின் என்னுடைய கழக நிர்வாகிகள், தொண்டர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள் எனக்கு பின்னால் ஏதோ ஒரு தொண்டன் இந்த கட்சிக்கு பொதுச் செயலாளராக வருவார்.திமுகவில் இந்த நிலைமை இருக்குமா? கிடையாது அவர் தான் குத்தகைக்கு எடுத்து  திமுக கட்சியை நடத்துகிறார், இந்த பழக்க தோஷத்தில் அவர் கூறுகிறார்.

கேள்வி; அதிமுகவில் நிறைய வாரிசுகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்?

பதில்; இரண்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாரிசு என்பது அந்தக் கட்சிக்கு தொடர்ந்து தலைமை ஏற்பது தான்.

ஆனால் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் மாறி மாறி வருவார்கள் இன்னைக்கு இவர் போட்டியிடுவார் நாளைக்கு மற்றொருவர் வந்து விடுவார் அது வாரிசு கிடையாது. அது எப்படி வாரிசு சொல்ல முடியும் .மதுரை கிழக்கு தொகுதியில் ஒருவர் போட்டியிடுகிறார் என்றால் அடுத்த தடவை வேறொருவர் போட்டியிடுவார் வாரிசு கிடையாது.

 ஒரு கட்சியில் ஒருவர் தலைவராக இருக்கும் பொழுது அவர் குடும்பத்தில் உள்ள உறுப்பினர். அதற்கு தலைவராக பொறுப்பு ஏற்கும் போது அது தான் வாரிசு, அப்படிப்பட்ட கட்சி திமுக கட்சி.

கேள்வி; நீங்கள் பொய் பேசுகிறீர்கள் என்று ஸ்டாலின் விமர்சனம் செய்கிறாரே?

பதில்; நான் என்ன பொய்யா பேசினேன்? நான் தெளிவாக எல்லா கூட்டத்திலும் பேசி வருகிறேன். நான் என்ன பொய் பேசினேன் என்று அவர் விளக்க வேண்டும்? ஆனால் அவர் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்.

எல்.இ.டி.டிவிகள் போட்டு விளக்கம் காட்டினேன். சென்னைக்கு மிக்ஸாம் புயல் ஏற்பட்டது. அப்போது எப்படி எல்லாம் பொய் பேசினார்கள். உங்கள் ஊடகத்தில் வந்த செய்தி தான் நான் வெளியிட்டேன் நான் ஒன்னும் தனியாக வெளியிடவில்லை.

 உங்கள் ஊடகத்தில் படம் பிடித்து தொலைக்காட்சி வாயிலாக வெளியிடப்பட்ட செய்தியை நான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எல்.இ. டி.மூலம் தெரிவித்தேன்.

ஒவ்வொரு அமைச்சர்களும் ஒன்று சொன்னார்கள் அதில் முதல்வர் சொன்னார் மழைநீர் வடிகால் பணி 99 சதவீதம் முடிந்துவிட்டது என்று கூறினார். மழை பெய்து மக்கள் பாதித்த பின்பு, அதே துறையைச் சேர்ந்த அமைச்சர் 38 சகவீதம் முடிந்தது என்று கூறினார். இதுதான் பச்சை பொய் .

அதிமுக பொருத்தவரை நான் மேடை ஏறி பேசும் பொழுது, இதுவரை எந்த பொய் பேசினேன் என்று சொல்லுங்கள் நான் விளக்கம் சொல்கிறேன்.  நான் தெளிவாக மேடையில் சொல்லி விட்டேன். ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் 520 அறிக்கை வெளியிட்டார், அதில்  98 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறினார். அது பொய் தானே? இதை ஊடகங்கள்  ஏன் பேச மாட்டீர்களே..

ஊடகத்தின் வாயிலாக நீங்கதானே 520 அறிக்கையில் வெளியிட்டீர்கள். அதில் எவ்வளவு நிறைவேற்றி உள்ளது என்று உங்களுக்கு நன்றாக தெரியும் இந்த கேள்வியை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும்.

கேள்வி: சென்ற இடமெல்லாம் மக்களிடம் எப்படி எழுச்சி உள்ளது?

பதில்; மிகப்பெரிய பிரகாசமாக எழுச்சி உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் 39 இடங்கள், பாண்டிச்சேரியிலும் வெற்றி பெறுவோம் ,விளவங்கோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.

 மக்கள் எழுச்சியை பார்க்கிறோம் நான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பார்க்கும் பொழுது ஆர்வத்துடன் மக்கள் வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பிரகாசமாக உள்ளது .இதையெல்லாம் நாங்கள் பார்க்கும் பொழுது இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி அனைத்து இடங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வரலாற்று படைக்கப் போகிறது என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *