சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லஷ்மி நகர் பகுதியில் இன்று அதிகாலை பீர்கன்காரனை சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்,

அப்போது சந்தேகபடும்படி வந்த சொகுசு காரை மடக்கி பிடித்த காவலர்கள் சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புடைய 547 கிலோ குட்கா இருப்பதை கண்டுபிடித்தனர்,

மேலும் காரில் வந்த இருவரை பிடித்து விசாரித்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்தவர்களான மனோகர் லால்,சுரேஷ் குமார் என்பதும் திருப்பதியில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் போலீயான நம்பர் பிளேட் பயன்படுத்தி கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,
தொடர்ந்து இவர்களுக்கு குட்கா விற்பனை செய்து வந்த கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.