• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

54 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை.. விட்டுவெப்போமா நாங்க..!

Byகாயத்ரி

Feb 14, 2022

இந்தியாவில் ஏற்கனவே பல சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது.தற்போது மேலும் சில செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் உள்ள 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே, இந்தியாவை உளவு பார்க்கும் விதமாக பல்வேறு செயலிகள் உள்ளதாகக் கூறி கடந்த ஆண்டில் பல சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது.இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் உள்ள மேலும் 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்ஃபி எச்டி, விவா வீடியோ எடிட்டர், ஆப் லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட செயலிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.