• Wed. Jul 16th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்..,

ByArul Krishnan

Jun 11, 2025

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ஆதமங்கலம், மேலூர், தொளார், சாத்தநத்தம், உள்ளிட்ட கிராமத்தில் நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் தொளார், மருதத்தூர், தெத்தேரி, கொடிக்கலாம், குடிகாடு, வையங்குடி, கோடங்குடி, எரப்பவூர், எழுமாத்தூர், ஆவினங்குடி, உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த நெல்லை அறுவடை செய்து இங்கு உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் மாலை, இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு பொய்வதால் விவசாயிகள் கொண்டு வந்த ஐயாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஆகியுள்ளது. அதேபோல் கொள்முதல் செய்யப்பட்ட 4 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள 25,000 நெல் மூட்டைகள் லாரி பற்றாக்குறையால் குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் ஆங்காங்கே திறந்த வெளியில் இருப்பதால் தற்போது மழை பெய்வதால் அந்த நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து சேதம் ஆகி வருகிறது.

மேலும் இப்பகிதியில் தொடர்ந்து மழை இருப்பதாக உள்ளநிலையில் விரைவாக விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை லாரிகள் மூலம் குடோனுக்கு ஏற்றி அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.