• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பசுவின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள்

ByKalamegam Viswanathan

Apr 19, 2023

பசுவின் வயிற்றில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் – அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மதுரை கால்நடை மருத்துவ குழுவினர்.!!
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு சொந்தமான பசுவுக்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தும் குணமடையவில்லை. இதனை தொடர்ந்து அவர் தல்லாகுளம் கால்நடை பன்முக மருத்துவமனைக்கு மாட்டை அழைத்து வந்தார்.
கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தபோது, பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது.

அறுவை சிகிச்சை மூலம் பிளாஸ்டிக் பைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் முதன்மை டாக்டர் வைரவசாமி தலைமையில் உதவி டாக்டர்கள் முத்துராமன், அறிவழகன், விஜயகுமார், முத்துராம் மற்றும் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்அப்போது, அந்த பசுவின் வயிற்றில் 50 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்பு பொருட்கள், நாணயங்கள், ஆணி போன்ற பல பொருட்களும் இருந்தன. அவற்றை டாக்டர்கள் அகற்றினர். இந்த அறுவை சிகிச்சையானது, சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் நடந்தது. தற்போது அந்த பசு தல்லாகுளம் பன்முக மருத்துவமனையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது என மருத்துவ குழு தெரிவித்துள்ளது..